INDvENG : சொதப்பிய விராட் கோலி..மூன்றாவது போட்டியில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வீரர்கள் மாற்றமில்லாமல் இரண்டாவது போட்டியில் விளையாடிய வீரர்கள் விளையாட வேண்டும் என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

virat kohli Yashasvi Jaiswal

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து,  மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது என்ற காரணத்தால் இந்த கடைசி போட்டியில் நிதானமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், கடைசி போட்டியில் விராட் கோலிக்கு பதில் மீண்டும் அணியில் ஜெய்ஷ்வால் இடம்பெற வாய்ப்புள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், முதல் போட்டியில் விராட் கோலி விளையாடாத நிலையில், அணியில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பிய நிலையில், ஜெய்ஷ்வால் வெளியே இருந்தார்.

ஆனால், இரண்டாவது போட்டியில் விராட் கோலி எதிர்பார்த்த அளவுக்கு ஒரு சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அரை சாதமாவது எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, மூன்றாவது போட்டியில் நிதானமாக தான் விளையாடவேண்டும் என்பதாலும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது “இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் விளையாடினாள் தான் சரியாக இருக்கும். வீரர்கள் யாரையும் மாற்றம் செய்யவேண்டாம்” என அட்வைஸ் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அப்படி யாரையாவது விளையாட வைக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அர்ஷ்தீப் சிங் அல்லது ரிஷப் பந்தை விளையாட வைக்கலாம்.

ஆனால், என்னை பொறுத்தவரை இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது, எனவே, இந்த மாதிரி சூழலில் தற்போதைய XI உடன் தொடர்வது நல்லது. கேஎல் ராகுல் சரியாக விளையாடவில்லை என்கிற விமர்சனங்கள் வந்தாலும் அவருக்கு நீண்ட நேரம் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அந்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தால் சரியாக விளையாடுவார். கேப்டனும் துணை கேப்டனும் முன்னணியில் இருந்து வழிநடத்தினர். ரோஹித் வெவ்வேறு பகுதிகளில் சிக்ஸர்கள் அடித்தார், இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் இருந்து வருகிறது. எனவே, அதே வீரர்கள் மாற்றமில்லாமல் விளையாடினால் நன்றாக இருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan