INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
நாளை கட்டாக் மைதானத்தில் நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்க்கப்படும் அணி வீரர்கள், வானிலை நிலவரம், மைதானத்தின் நிலை பற்றி இச்செய்தியில் காணலாம்.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவை விளையாடி வருகின்றன. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதே போல கடைசியாக நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது.
நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முந்தைய போட்டிகள் போலவே குறைவான ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்த இங்கிலாந்து தொடரானது அடுத்து நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் சூழலில் அவரது ஃபார்ம் ரசிகர்களை கவலையளிக்க வைத்துள்ளது. அதே போல விராட் கோலியும் பெரிய அளவில் தனது ஆட்டத்தை கடந்த சில ஆட்டங்களில் வெளிப்படுத்தவில்லை. நாக்பூர் போட்டியிலும் இவர் காயம் காரணமாக விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
இப்படி இருக்க, இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி சாம்பியன்ஸ் டிராபிக்கு நம்பிக்கை அளித்தனர். கடந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி குறைவான பந்துகளில் 50 ரன்களை கடந்திருந்தார். 2வது போட்டியில் அவர் நாளை களமிறக்கப்படமாட்டார் என்றே கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் :
நாளை களமிறங்கும் தோராய இந்திய அணி வீரர்கள் விவரம் – கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி , சுப்மன் கில், KL ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர் , வருண் சகர்வர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி சார்பாக நாளை களமிறங்க எதிர்பார்க்கப்படும் வீரர்களாக ஜோஸ் பட்லர் தலைமையில் பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானம் எப்படி?
நாக்பூர் கிரிக்கெட் மைதானம் போல கட்டாக் (ஒடிசா) மைதானமும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் மற்றொரு மைதானமாகும். அதோடு, கட்டாக்கில் பவுன்ஸர்கள் குறைவாக இருப்பதால், இங்கிலாந்து அணியின் பேட்டிங் எளிதாக இருக்காது. ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு துல்லியமான பந்து வீச்சை வெளிப்படுத்த எதுவாக இருக்கும். அதனால், இந்த மைதானமும் இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
வானிலை எப்படி இருக்கும்?
ஞாயிற்றுக்கிழமை பகலில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாலையில் 19 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கட்டாக்கில் நடந்த ஆட்டங்களில் பலத்த பனி பெய்துள்ளது, எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே தேர்வு செய்யும் என கூறப்படுகிறது. பேட்டிங் 2வது இன்னிங்சிற்கு சாதகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நாளைய 2வது நாள் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுகிறதா? அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்து 3வது நாள் ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.