இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இறுதி மற்றும் 5 ஆம் டி-20 போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்பது குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
இதனைதொடர்ந்து 5-ம் மற்றும் இறுதி டி-20 போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளை வைத்து பார்த்தால் 2 ஆம் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நான்காம் போட்டியில் இந்திய அணி, அதனை முறியடித்தது.
கடந்த நான்கு போட்டிகளை போலவே, இந்த போட்டியிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அணியின் தொடக்க ஆர்டர், இதுவரை நடந்த போட்டிகளில் சற்று சொதப்பலாக இருந்து வந்த நிலையில், தற்பொழுது அதனை சூரியகுமார் யாதவ் மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…