உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-யின் 29-வது லீக் போட்டியில் இன்று இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தனர். திடீரென கில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த விராட் கோலி டக்அவுட் ஆகி வெளியேறினார். அதைப்போல ஷ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார்.
பிறகு வந்த கே.எல்.ராகுல் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து நன்றாக விளையாடி கொண்டிருந்தார். ஒரு பக்கம் சிக்ஸர் பவுண்டரி என ரோஹித் வெளுத்து வந்த நிலையில், மற்றோரு பக்கம் கே.எல்.ராகுலும் வெளுத்து வாங்கினார். பிறகு ராகுலும் 39 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.
பின் நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின் பேட்டிங் செய்ய வந்த சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாடி வந்தார். மறுமுனைக்கு வந்த ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு அடுத்தபடியாக வந்த முகமது ஷமியும் 1 ரன்கள் எடுத்து வெளிறினார்.
பின் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார் ஒரு பக்கம் ரன்களை அடிக்காமல் இவர் இருந்த நிலையில், மற்றோரு பக்கம் சூர்யா சிக்ஸர் பவுண்டரி என ஒரு அதிரடி ஆட்டம் காட்டினார். அதிரடி காட்டியா சூர்யா 46-வது ஓவரில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 49 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக பும்ரா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். குல்தீப் யாதவ் 9 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்களும். அடில் ரஷித்2 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்திய அணி 229 ரன்கள் அடித்திருக்கும் நிலையில். அடுத்ததாக 230 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…