#INDvENG : ரோஹித், சூர்யா அசத்தல் பேட்டிங்! இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த இலக்கு?

INDvENG

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-யின் 29-வது லீக் போட்டியில் இன்று இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தனர். திடீரென கில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த விராட் கோலி டக்அவுட் ஆகி வெளியேறினார். அதைப்போல ஷ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார்.

பிறகு வந்த கே.எல்.ராகுல் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து நன்றாக விளையாடி கொண்டிருந்தார். ஒரு பக்கம் சிக்ஸர் பவுண்டரி என ரோஹித் வெளுத்து வந்த நிலையில், மற்றோரு பக்கம் கே.எல்.ராகுலும் வெளுத்து வாங்கினார். பிறகு ராகுலும் 39 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.

பின் நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின் பேட்டிங் செய்ய வந்த சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாடி வந்தார். மறுமுனைக்கு வந்த ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு அடுத்தபடியாக வந்த முகமது ஷமியும் 1 ரன்கள் எடுத்து வெளிறினார்.

பின் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார் ஒரு பக்கம் ரன்களை அடிக்காமல் இவர் இருந்த நிலையில், மற்றோரு பக்கம் சூர்யா  சிக்ஸர் பவுண்டரி என ஒரு அதிரடி ஆட்டம் காட்டினார். அதிரடி காட்டியா சூர்யா 46-வது ஓவரில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 49 ரன்களுக்கு வெளியேறினார்.  அவருக்கு அடுத்ததாக பும்ரா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். குல்தீப் யாதவ் 9 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.  பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்களும். அடில் ரஷித்2 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்திய அணி 229 ரன்கள் அடித்திருக்கும் நிலையில். அடுத்ததாக 230 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்