#INDvENG : சர்பராஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா ..! ஏன் தெரியுமா ..?

இங்கிலாந்து அணியுடன் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஒரு மோசமான தொடக்கத்திற்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜாவின் கூட்டணியால் இந்திய அணி மீண்டு வந்தது.  இருவரின் கூட்டணியில் 207 ரன்களை இந்திய அணி கடந்த நிலையில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார்.

அதன் பிறகு சர்ஃபரஸ் கான் களமிறங்கினர். இவருக்கு இது முதல் சர்வேதச டெஸ்ட் போட்டியாகும். களமிறங்கியது முதல் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை கதி கலங்க வைத்தார். வெறும் 48 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஜடேஜாவுடன்  கூட்டணி அமைத்த சர்ஃபரஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

UEFA சாம்பியன் : ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்ற பிஎஸ்ஜி ..!

சர்ஃபரஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா மார்க் வுட் கைக்கு அந்த பந்தை அடித்து விட்டு ஓடினார். அதை கண்டு எதிர்முனையில் நின்ற சர்ஃபரஸ் கானும் ஓட்டம் எடுத்தார். நேராக கைக்கு சென்ற பந்தை, மார்க் வுட் ஸ்டம்பை நோக்கி எறிந்தார். இதில் ரன் எடுக்க முயன்ற சர்ஃபரஸ் கான் ரன் அவுட் ஆனார்.

இதை பெவிலியனிலிருந்து கண்டு கொண்டிருந்த ரோஹித் சர்மா தனது தலையில் வைத்திருந்த தொப்பியை கோபத்துடன் கழட்டி கீழே எறிந்தார். நன்கு விளையாடி கொண்டிருந்த சர்ஃபரஸ் கான், ஜடேஜாவின் தவறான ரன் அழைப்பால் ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணியும், இந்திய ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆட்டத்தின் முதல் நாள் முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சர்ஃபரஸ் கான் இதை குறித்து கூறுகையில், ” ஜடேஜா, ஆட்டம் முடிவடைந்து ட்ரெஸ்ஸிங் அறைக்கு வந்தவுடன் என்னிடம் ஒரு தவறான புரிதல் இருந்தது என்று கூறினார் அதற்கு நான் அவரிடம், இதெல்லாம் விளையாட்டில் ஒரு பகுதி, என்று கூறினேன்” என தெரிவித்தார்.

அதன் பின் நேற்று மாலை ஜடேஜா தனது இன்ஸ்டராகிமில், சர்ஃப்ராஸ் கான் அவுட் வருத்தம் அளிக்கிறது, அவர் நன்றாக விளையாடினார். அது எனது தவறான அழைப்பு என்று கைகூப்பி மன்னிப்பு கேட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்