#INDvENG: 4-வது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி..!
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
4 வது டி-20 போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 12, கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
அவரையடுத்து களமிறங்கிய கோலி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற பின்னர், சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இதைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 30 பாண்டியா, 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இறுதியாக இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்தனர்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியில் முதலில் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர். ஆனால், ஆட்டம் தொடக்கத்திலே 9 ரன்னுடன் பட்லர் வெளியேற, இதைத்தொடர்ந்து இறங்கிய டேவிட் மாலன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிதானமாக விலையாடி வந்த ஜேசன் ராய் 40 ரன்கள் எடுத்தார்.
பிறகு களம்கண்ட பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டுகொண்டு வந்தனர். ஆனால் இவர்களின் கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர், ஜானி பேர்ஸ்டோவ் 25, பென் ஸ்டோக்ஸ்அரைசதம் அடிக்காமல் 46 ரன்னில் வெளியேறினர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் சமமாக உள்ளது. இந்திய அணியில் சர்துல் தாக்கூர் 3 , பாண்ட்யா, ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.