INDvENG : மீண்டும் அதையே செய்த இங்கிலாந்து கேப்டன்! பந்துவீசி வரும் இந்திய அணி!
கட்டாக்கில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச தயாராகி வருகின்றனர்.
![IND vs ENG 2nd ODI - Eng won the Toss](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-Eng-won-the-Toss.webp)
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். டி20 தொடர் மற்றும் முதல் ஒருநாள் போட்டியை வென்ற உத்வேகத்தில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
காட்டாக மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கடந்த ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தான் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் ஓவரை இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி வீசியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட், பிலிப் சால்ட் களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் :
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஷ்வால் இந்த போட்டியில் களமிறங்கவில்லை. விராட் கோலி களமிறங்கியுள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் :
ஜோஸ் பட்லர் தலைமையில் பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வூட், சாகிப் மஹ்மூத் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)