INDvsENG : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-யின் 27-வது லீக் போட்டி இன்று லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் வெற்றிபெற்ற புள்ளிவிவர பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதைப்போல, இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அதில் 4 போட்டியில் தோல்வி அடைந்து 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிவிவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
எனவே, கண்டிப்பாக இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கிலாந்து அணியும், இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 6 போட்டிகள் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை படைத்தது புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும் களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இந்தியா : ரோஹித் சர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(WK), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w/c), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்
மேலும், இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் 8 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதியிருக்கும் நிலையில், 4 போட்டியில் இங்கிலாந்து அணியும் 3 போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளது. 1 போட்டி சமநிலையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…