INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!
சாம்பியன்ஸ் டிராபி 2வது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்துள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பெவிலியன் திரும்பினர்.
வங்கதேச வீரர்கள் சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹுசைன், முஸ்தாபீர் ரஹீம் ஆகியோர்தன்சிம் ஹசன் சாஹிப் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மிராஜ் 5 ரன்களிலும், ஹாசன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் டவ்ஹித் ஹிரிடோய் நிலைத்து ஆடி சதம் விளாசினார். 118 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜாக்கர் அலி தனது பங்கிற்கு 114 பந்துகளை சந்தித்து 68 ரன்களை எடுத்தார். ரிஷாத் ஹொசைன் 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 228 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.