AUSvIND: சதம் விளாசிய பின்ச், ஸ்மித்.. இந்தியாவிற்கு 375 ரன் இலக்கு..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 69 ரன்கள் எடுத்தார். பின்னர் ஸ்மித் களமிறங்கினார். இதைத் தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பின்ச் சதம் விளாசி 114 ரன்கள் குவித்தார்.
பின் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்தில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்தார். கடைசிவரை அதிரடியாக விளையாடி வந்த ஸ்மித் 66 பந்தில் 105 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 374 ரன்கள் எடுத்தனர்.
375 ரன்கள் இலக்காக இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டும், பும்ரா, நவ்தீப் சைனி, சாஹல் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025