INDvAUS : அடிலெய்ட் டெஸ்ட் போட்டி! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

rohit sharma

அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 ஆண்டுக்கான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஏற்கனவே நடந்து முடிந்து அதில் இந்திய அணி வெற்றிபெற்று விட்டது.

அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று டிசம்பர் 6ஆம் தேதி  ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு  பகலிரவாக பிங்க் நிற பந்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்தியா 

இந்த போட்டி இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த்(wk), ரோஹித் சர்மா(c), நிதிஷ் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

ஆஸ்ரேலியா : உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(wk), பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்

பொதுவாகவே, பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் இதுவரை  ஒரு முறை கூட தோல்வியை கண்டதில்லை. ஆனால், அதே சமயம் இந்தியா அணி 36 ரன்களுக்குஆல் அவுட்டாகி ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்ததுள்ளது.

அதே சமயம், பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் சில சாதனைகளையும் படைத்தது வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, நான்கு போட்டிகளில் 46.16 சராசரியுடன் 277 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதைப்போல,  ரோஹித்தின் சாதனையைப் பார்த்தால், அவர் மூன்று போட்டிகளில் விளையாடி 43.25 சராசரியில் 173 ரன்கள் எடுத்துள்ளார். எனவே, இரண்டு வீரர்களும் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இருப்பதால் இன்றயை போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், வழக்கமாக இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மா இந்தமுறை மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்