இந்தியா vs தென்னாபிரிக்கா : கடந்து வந்த பாதை, வெற்றி வியூகம் …இதோ..!

IND v SA , T20 Worldcup Final 2024

டி20உலகக்கோப்பை : தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் சந்திக்கும் இரு அணிகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இதுவரை இந்த தொடரில் ஒரு தோல்விகளை கூட சந்திக்கவில்லை.

இதனாலே இந்த இறுதி போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. இரு அணிகளின் பொதுவான பலமே இரு அணிகளின் பந்து வீச்சு தான். அதே நேரம் தென்னாபிரிக்கா அணியை விட இந்திய அணி பேட்டிங்கில் சற்று வலுவாக இருந்து வருகின்றனர்.

இந்திய அணி இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் முதல் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரான 2007 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் தென்னாபிரிக்கா அணி ஐசிசி தொடரில் முதல் முறையாக ஒரு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த பல வருடங்கள் நடைபெறும் ஐசிசி தொடரில் தென்னாபிரிக்கா அணி அரை இறுதி போட்டி வரை வந்துவிட்டு வெளியேறிவிடுவார்கள்.

கடந்து வந்த பாதை

இந்திய அணி :

  • அயர்லாந்து அணியுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
  • பாகிஸ்தான் அணியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
  • அமெரிக்கா அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • கனடா அணியுடன் போட்டி நடைபெறவில்லை.
  • ஆப்கானிஸ்தான் அணியுடன் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (சூப்பர்-8)
  • வங்கதேச அணியுடன் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (சூப்பர்-8)
  • ஆஸ்திரேலியா அணியுடன் 24 ரன்கள் விதியாசத்தில் வெற்றி (சூப்பர்-8)
  • இங்கிலாந்து அணியுடன் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (அரை இறுதி)

தென்னாபிரிக்கா அணி :

  • ஸ்ரீலங்கா அணியுடன் 6 விக்கெட் விதியாசத்தில் வெற்றி.
  • நெதர்லாந்து அணியுடன் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • வங்கதேச அணியுடன் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • நேபால் அணியுடன் 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • அமெரிக்கா அணியுடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (சூப்பர்-8)
  • இங்கிலாந்து அணியுடன் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (சூப்பர்-8)
  • வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 விக்கெட் (DLS) வித்தியாசத்தில் வெற்றி (சூப்பர்-8)
  • ஆப்கானிஸ்தான் அணியுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (அரை இறுதி)

வெற்றி வியூகம் :

இந்திய அணியில் பலம் அவர்களது பேட்டிங் தான், தொடக்க வீரரான விராட் கோலி இதுவரை பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை, இருப்பினும் ரோஹித் சர்மா, பண்ட் , சூரியகுமார் யாதவ், பாண்டியா என வலுவான பேட்டிங் கொண்ட அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.

அதே போல தென்னாபிரிக்கா அணியும் வலுவான பேட்டிங் கொண்ட அணியாக தான் இருந்து வருகிறது. ஆனால், முனைப்புடன் எந்த வீரரும் இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளில் பந்து வீச்சு வீரர்கள் சமமாகவே உள்ளனர். அதிலும் இந்திய அணியில் குலதீப் யாதவ் என்றால் அங்கு ஷாம்ஷி உள்ளார். அதே போல இந்தியா அணியில் பும்ரா என்றால் தென்னாபிரிக்கா அணியில் ரபாடா உள்ளார். ஆகையால் இந்த போட்டி இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது இன்றைய நாளில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையாக அமையும் என்பதில் சந்தீகமில்லை. இந்த போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸ் மைதானத்தில் வைத்து நடைபெறும்.

இந்த போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்