இந்தியாவின் தொடர்ச்சியான ஆதிக்க வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து..!
நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆனது ஹாமில்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதன் பின் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிய நிலையில் இதில் ஆரம்பத்திலே அதிர்ச்சி கண்டது.இதில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது.
இந்தத் தோல்வியின் மூலமாக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதன் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை ஒரு முடிவிற்கு வந்தது.இந்தியா இதற்கு முன் 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்த நிலையில் நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது நான்காவது முறை ஆகும்.
இதில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணியின் 2வது மிகக்குறைந்த ரன் வெற்றி இது ஆகும். கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும் மற்றும் 2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும் இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.இந்த தோல்வியில் மூலமாக இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியில் தோல்வியை சந்தித்து உள்ளது.
மேலும் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்தது கிடையாது.
இதில் கொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி சர்வதேச அளிவில் 4 வது இடத்தையும் மற்றும் நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்று உள்ளார்.நேற்றைய முன்தினம் போட்டியின் மூலமாக எம்எஸ் டோனி தன்னுடைய 300 வது டி20 கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளார்.இதன்மூலமாக 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா 298 போட்டிகளிலும் மற்றும் சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.