தரவரிசையில் சரிந்த இந்திய அணியின் புள்ளிகள்!!டாப்புக்கு சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்!!
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என கணக்கில் வென்றது.ஏற்கனவே இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றதுக்கு பழி தீர்த்துக்கொண்டது நியூசிலாந்து அணி.
இந்நிலையில் டி20 போட்டிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 135 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.அதேபோல் இந்திய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ,இந்திய அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்சமாக அவர் பிடித்த இடமாகும். அதேபோல் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ரஷீத் கான் உள்ளார்.