வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

TeamIndia

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் விளையாட இந்தியா அடுத்த மாதம் வெஸ்ட் இன்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

மேலும், இந்தியா ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆசியக் கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருவதால், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளனர். அதே நேரத்தில் சஞ்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்தேவ் உனத்கட் இரு அணிகளிலும் இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக கேஎல் ராகுல் போட்டியில் இருந்து விலகி இருப்பதால், ஒருநாள் தொடருக்கான துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (VC), கேஎஸ் பாரத் (WK), இஷான் கிஷான் (WK), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி

இந்திய ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா (C), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா (VC), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்

டெஸ்ட் போட்டிகள்:

1வது டெஸ்ட் போட்டி ஜூலை 12-16 தேதிகளில் டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும். 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 20-24 தேதிகளில் டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.

ஒருநாள் தொடர் போட்டிகள்:

1வது ஒருநாள் போட்டி ஜூலை 27ம் தேதி, பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடைபெறும். 2வது ஒருநாள் போட்டி ஜூலை 29 தேதி, பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடைபெறும். 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1 தேதி, டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெறும். இந்த ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இரவு 7.00 மணி அளவில் நடைபெறுகிறது.

India's tour of West Indies
India’s tour of West Indies [Image source : bcci]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்