பிருத்வி அதிரடியில் இந்தியா அதிரடி ரன் குவிப்பு …!முதல் நாளிலேயே 300 ரன்னை தாண்டியது இந்திய அணி …!
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆரம்பம் முதல் 18 வயது பிருத்வி ஷா அற்புதமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம் தனது முதல் டெஸ்டில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 18 வருடம் 329 நாளில் இச்சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன்பு 20 வருடம் 126 நாள்களில் அப்பாஸ் அலி பைக், இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்ததே சாதனையாக இருந்தது.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஷா 75, புஜாரா 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பிறகும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார் பிருத்வி ஷா. இதனால் பவுண்டரிகள் தொடர்ந்து கிடைத்தன. எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 பந்துகளில் சதமெடுத்த தவனின் சாதனையை பிருத்வி ஷாவால் தகர்க்க முடியவில்லை. 99 பந்துகளில் சதமடித்து, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். மேலும் இளம் வயதில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் பிருத்வி ஷா 7-ம் இடம் பிடித்துள்ளார்.
பிருத்வி ஷாவுக்கு இணையாக வேகமாக ரன்கள் குவித்தார் புஜாரா. இன்று அவருடைய ஸ்டிரைக் ரேட் பெரும்பாலும் 70களில் இருந்தது. ஷா- புஜாரா கூட்டணி 245 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தது. ஷா போல சதமடிப்பார் என்று எண்ணப்பட்ட புஜாரா, 130 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து லூயிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதமடித்த பிறகு சற்று நிதானமாக ஆடிவந்த பிருத்வி ஷா, 154 பந்துகளில் 134 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 51 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. புஜாராவும் பிருத்வி ஷாவும் ஆட்டமிழந்த நிலையில் கோலியும் ரஹானேவும் களத்தில் உள்ளார்கள்.
கேப்டன் கோலி 72 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 17 ரன்களுடனும்களத்தில் உள்ளனர்.முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்துள்ளது.