இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார் ..!

இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான தத்தாஜி கிருஷ்ணராவ் கெய்க்வாட் அவர்கள் இன்று குஜராத்தில், வதோதராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போது காலமானார். அவரது வயது 95 ஆகும். இவரது மகன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் ஆவார்.

ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.!

முன்னாள் பரோடா மாநிலத்தில் உள்ள மகாராணி சிம்னாபாய் உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன் பின் 1957-1958 இல் பரோடா கிரிக்கெட் அணியின் கேப்டனாக கிரிக்கெட் எனும் களத்தில் இறங்கினர். அதே ஆண்டில் பரோடா அணிக்காக ரஞ்சிக் கோப்பையையும் வென்றார்.

கெய்க்வாட் தலைமையிலான பரோடா அணி, வதோதராவில் உள்ள மோதிபாக் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. கெய்க்வாட் அவர்கள் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சி.எஸ். நாயுடுவின் மாணவராக இருந்தவர். அதன் பின், 1948 இல் இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராக பரோடா மகாராஜாவால் நியமிக்கப்பட்டார்.

விஜய் ஹசாரே போன்ற ஜாம்பவான்களுடன் கூட்டணியைப் பகிர்ந்து கொண்ட கெய்க்வாட் அவர்கள், எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்ட போது அதன் முதல் கேப்டனாக நியம்கிக்கபட்டார். பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை பரோடா ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். அக்டோபர் 2020 இல், கெய்க்வாட்டின் 92-வது பிறந்தநாளை நினைவிருக்கும் வகையில் அஞ்சல் துறை ஒரு நினைவு அட்டையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்