சொதப்பிய இந்தியா…!முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது இந்தியா…!
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. 16.1 ஓவரின் போது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.மழையால் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வேல் 46,லின் 37 , ஸ்டோய்னிஸ் 31 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 2, கலீல் அகமது,பூம்ரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணி 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் மட்டும் 77 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .