#Viral video: மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை சொன்ன இந்திய இளைஞர்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஒருநாள் போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியின் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 20 ஆம் ஓவரில் ஒரு தரமான சம்பவம் நடந்தது.
அப்பொழுது கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வந்த நிலையில், போட்டியை காணவந்த இந்திய ஜெர்சி அணிந்து வந்த ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலியா ஜெர்சி அணிந்து வந்த பெண்ணிடம் வித்தியாசமாக தந்து காதலை தெரிவித்துள்ளார். மைதானத்தில் அதனை பேருக்கும் முன்னாள் அந்த இந்திய ரசிகர், தனது ஆஸ்திரேலியா காதலியிடம் தனது காதலை கூறியுள்ளார். கூட்டத்திற்கு மத்தியில் தனது காதலை கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரின் காதலை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து தங்களின் அன்பை பகிர்ந்துகொண்டனர். அவர்களை சுற்றியிருந்த இதர ரசிகர்கள், அவர்களை வாழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை பார்த்த ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல், அவர்களை பார்த்து கைதட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில், காதலுக்கு இனமோ, அழகோ முக்கியமில்லை என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
Finally an Indian has won something in Australia on this tour .#AUSvIND pic.twitter.com/6KusQXbL5P
— Abhishek Singh (@abhis1ngh) November 29, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025