மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக்கோப்பையின் பிரிவு பி (Group-B)-ல் 9 வது போட்டியில் இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் மோதியது. நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீராங்கனைகளான எஸ் டெய்லர், எஸ் கேம்பெல்லே, மற்றும் செடியன் நேஷன் ஆகியோர் அதிக ரன்கள் எடுத்திருந்த நிலையில் 118 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு ஆட்டமிழந்தது.
119 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் ஷஃபாலி வெர்மாக் மற்றும் ஸ்மிருதி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷஃபாலி வெர்மாக் 28 ரன்கள் எடுத்து அஃபி பிளெட்சரின் கேட்ச் ஆட்டமிழந்தார். இவரையடுத்து அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ரிச்சா கோஷ் (44* ரன்கள்) மற்றும் தேவிகா வைத்யா கூட்டணி இலக்கை அடையும் வரை களத்தில் விளையாடினர். பின்னர் 18 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி 119 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்தது. இப்போட்டியின் ஆட்டநாயகியாக தீப்தி சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…