மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த டி20 தொடரின் முதல்போட்டி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இரண்டு அணிகளும் இந்த டி20 தொடரில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த காரணத்தால் மூன்றாவது போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இந்த தொடரை கைப்பற்ற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 3-வது போட்டி டிசம்பர் 19-ஆம் தேதி நவி மும்பை பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து.
இதன் காரணமாக, இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த டி20 தொடரை கைப்பற்றியது. இந்த டி20 தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் நீண்ட நாள் வறட்சி ஒன்றும் நீக்கியுள்ளது. ஏனென்றால், கடந்த 5-ஆண்டுகளாக இந்திய அணியால் சொந்த மண்ணில் டி20 தொடரை வெல்லமுடியில்லை.
இதனையடுத்து, இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியதன் முகாம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி டி20 தொடரை வென்றுள்ளது. மேலும், இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 22-ஆம் தேதி வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.