INDWvAUSW : சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா.!
ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த DEC 21 முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடியது. நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு நடைபெற்ற 3 ஒரு நாள் தொடரிலும் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வியை தழுவியது.
ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத இந்திய வீரர்கள்..!
இதனால் 3 T20 போட்டி தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் இருந்தனர். பின் நடைபெற்ற முதல் இரண்டு T20களில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்யாசத்திலும், இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 விக்கெட் வித்யாசத்திலும் வென்று தொடரை 1-1 என்று சமன் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது T20 ஐ வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இன்று இரு அணிகளும் களம் இறங்கியது. டாஸ் (TOSS) ஐ வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். தொடக்க வீராங்கனைகளான ஷாபாலியும், ஸ்ம்ரிதியும் ரன்களை சேர்த்தாலும் 5 வது ஒவரில் ஷாபாலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர். இதனால் இந்தியா அணி சற்று தடுமாற்றத்துடனே விளையாடி வந்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்தது.இந்திய மகளிர் அணியின் தரப்பில் அதிக பட்சமாக ரிச்சா கோஷ் 28 பந்தில் 34 ரன்களை எடுத்தார்.
பின்னர் 148 ரன்களை எட்டினால் வெற்றியை பெறலாம் என களமிறங்கியது ஆஸ்திரேலியா மகளிர் அணி. தொடக்கத்திலேயே ஒரு நல்ல ஆட்டத்தை வெளி படுத்தி ஆட்டத்தை வெற்றி பாதைக்கே கொண்டு சென்றனர். தொடக்க வீராங்கணைகள் இருவருமே அரை சதம் விளாசி இந்திய அணியின் பௌலிங்கை துவம்சம் செய்தனர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா மகளிர் அணி 18.4 ஓவர்களில் 149 ரன்களை எட்டி வெற்றியை ருசித்தது. இதன் விளைவாக இந்த டி20 தொடரையும் ஆஸ்திரேலியா மகளிர் அணி கைப்பற்றி உள்ளது.