இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டி முடிவைடைந்துள்ளது. மூன்றுபோட்டியில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றது
ஒரு நாள் தொடரின் 3- வது போட்டி நேற்று வர்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய அணைத்து போட்டிகளையும் சேர்த்து இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் எடுத்து உலக சாதனை வைத்திருந்தார்.
மேலும் தற்போது நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜு சார்லோட்டி எட்வர்ட்ஸ் சாதனையை முறியடித்தார். மிதாலி ராஜுக்கு இந்த சாதனையை முறியடிக்க 12 ரன்கள் மட்டுமே தேவைப்படிருந்த நிலையில், 24-வது ஓவரில் மிதாலி ராஜு பந்தை பவுண்டரி அடித்து எட்வார்ட்ஸ் சாதனையை முறியடித்தார். மொத்தமாக அவர் அடுத்த ரன்களின் எண்ணிக்கை 10,337.
அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 10ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை, உலகளவில் 2-வது வீராங்கனை என்ற சாதனையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…