மேற்கிந்திய தீவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி

rohit sharma

மேற்கிந்திய தீவை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்,அதிரடியாக அரை சதம் விளாசிய இஷான் கிஷன் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் :

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவின் தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கியன்.கைல் மேயர்ஸ்  வந்த வேகத்தில் 2 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பிராண்டன் கிங் (17) ,அலிக் அதானாஸ்(22),ஷாய் ஹோப்(36) என மூவர் மட்டும் அதிகபட்சமாக இரட்டை இலக்க ரன்னை கடந்தனர்.அதன் பின்னர் வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவர்களில்  முடிவில் 114 அனைத்து விக்கெட்டைகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையம் ரவீந்திர ஜடேஜா 3  விக்கெட்களை வீழ்த்த ஹர்திக் பாண்டியா,முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதில் தனது முதல் போட்டியில் களம்கண்ட முகேஷ் குமார் 5 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் இதில் ஒரு மெய்டன் அடங்கும்.

இந்திய அணி :

இதனைத்தொடர்ந்து இந்திய அணி 115 என்ற சுலபமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும்  சுப்மான் கில் களமிறங்கினர்.

சுப்மான் கில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க  இஷான் கிஷன் 52 ரன்கள் எடுத்து தனது வலுவான பேட்டிங்கை மீண்டும் நிருபித்தார் .அவரைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கு ரன்அவுட்  ஆகி ஏமாற்றத்தை தந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க அட்டமா சற்று மெதுவாக நகர்ந்தது இவர்களை தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 16 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தார். ஷர்துல் தாக்கூர் 1 ரன் எடுத்து  வந்தவேகத்தில் வெளியேறினர் .கேப்டன் ரோஹித் ஷர்மா  8 நபராக களத்தில் இறங்கி அவர் பங்கிற்கு 12 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியில் இந்திய அணி  22.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மியர், அலிக் அதானாஸ், ரோவ்மேன் பவல், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஓஷேன் தாமஸ், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், டொமினிக் டிரேக்ஸ் யானிக் கரியா

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர் , அக்சர் படேல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்