Asia Cup Super Fours:இலங்கையை சொந்த மண்ணிலே வீழ்த்திய இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

Indian cricke team Captain Rohit sharma

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர்ஸ், 4வது போட்டியானது கொழும்புவில் உள்ள  ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக  ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இப்போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.இந்திய அணி 80 ரன் இருக்கும்போது சுப்மன் கில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் சதம் அடித்து 13000 ரன்களை கடந்த விராட் கோலியின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.அடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க  கே.எல். ராகுல் 39 ரன்கள் , இஷான் கிஷன் 33 ரன்கள், ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் , ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் , அக்சர் படேல் 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.

இலங்கை பந்துவீச்சாளர்களில் துனித் வெல்லலகே 5 விக்கெட்களையும் அசலங்கா 4 விக்கெட்களையும்  வீழ்த்தி இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக குறைத்து  நெருக்கடியை கொடுத்தனர்.எம் தீக்ஷனா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிஸ்ஸங்க 6 ரன்களுக்கு பும்ராவிடம் ஆட்டமிழக்க மற்றொரு ஆட்டக்காரர் திமுத் கருணாரத்ன சிராஜிடம் ஆட்டமிழக்க இலங்கைக்கு ஆரம்பமே அடி சறுக்கியது.அதன் பின் வந்த அடுத்தடுத்து ஆட்டமிழக்க தனஞ்சய டி சில்வா(41) மற்றும்  துனித் வெல்லலகே (42) அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடினர்.இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர 172 ரன்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் , ஜஸ்பிரித் பும்ரா மற்றும்  ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும்.முகமது சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் துனித் வெல்லலகே தேர்வு செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori