இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தகுதிபெற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி சரிவர நடைபெற முடியாமல் இருந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 56 மற்றும் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 8 மற்றும் 17 ரன்களுடன் களத்தில் நின்றனர். 24.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்த சமயத்தில் சுமார் 4.30 மணியளவில் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது.
மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ‘ரிசர்வ் டே’ செய்யப்பட்டு இன்று மீண்டும் போட்டி தொடங்கும் அறிவிக்கப்பட்டது.ஆனால், இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதமானது. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி சரியாக 4.40 மணிக்கு 25 ஓவரில் இருந்து மீண்டும் தொடங்கியது.
இமாலய இலக்கு விராட் & கே.எல்.ராகுல் சதம் :
விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணிக்கு 356 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது .விராட் கோலி 94 பந்துகளை சந்தித்து 122 ரன்கள் எடுத்தார் இதன் மூலம் தனது 47 சதத்தை எடுத்து மட்டுமில்லாமல் 13000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.மறுபுறம் கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 111 ரன்னையும் எடுத்து தனது 6 வது சதத்தை பதிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து 357 ரன் என்ற வெற்றி இலைகளுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் தொடங்கியது முதல் விக்கெட்டாக இமாம்-உல்-ஹக் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க ,அவரைத்தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.ஆகா சல்மான்(23) இப்திகார் அகமது(23) ஃபகார் ஜமான்(27) ஆகியோர் மட்டும் இரட்டை இழக்க ரன்களை எடுக்க அதன் பின் வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
வரலாற்று வெற்றி :
பாகிஸ்தான் அணியில் இறுதி 2விக்கெட்கள் Abs Hurt முறையில் அவுட் கொடுக்கப்பட 32 ஓவர்கள் முடிவில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .இதற்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 1996 ஆம் ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற போட்டியில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்களையும் அர்ஷத் அயூப் 1998 ஆம் ஆண்டு டாக்கா போட்டியில் 5/21 மற்றும் சச்சின் டெண்டுல்கர் 2005 ஆம் ஆண்டு கொச்சி போட்டியில் 5/50 என வீழ்த்தியிருந்தனர்.
இதில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் ,2008 இல் மிர்பூரில் நடந்த போட்டியில் 140 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…