#INDvsENG : 2-ம் நாள் ஆட்டம்.. ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய அணி..!
இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் நிதானமாக விளையாடி 38 ரன்கள் யை எடுத்து அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நிற்காமல் வெறும் 3 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்து இருந்தது. பின்னர் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் மத்தியில் களமிறங்கிய ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். ஒருபுறம் ஜோ ரூட் சிறப்பாக விளையாட மறுபுறம் அவருக்கு துணையாக பென் ஃபோக்ஸ் விளையாடி வந்தார்.
READ MORE- #INDvsENG : இந்தியாவை புரட்டி போட்ட ஜோ ரூட் ..! 302 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி ..!
இருப்பினும் நிதானமாக விளையாடி வந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் அரைசதம் அடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்னில் சிராஜ் ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் கூட்டணியில் 113 ரன்கள் சேர்க்கப்பட்டது. இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
இந்நிலையில், 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
தற்போது களத்தில் ஜோ ரூட் (106*) ஒல்லி ராபின்சன் (31*) ரன்களுடன் உள்ளனர். இந்திய அணியில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.