இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் சிறிது நேரம் நிதானமான விளையாடி 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். பின்னர் களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இவர்கள் கூட்டணியில் 110 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இரட்டை சதம் அடித்தது அசத்தல்.. கோலி, ரோஹித் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால்..!
பின்னர் களம் கண்ட ரஜத் படிதார் 32, அக்சர் படேல் 27, ஸ்ரீகர் பாரத் 17 ரன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் ஜெய்ஸ்வால் 179* ரன்களுடனும் மறுபுறம் அஸ்வின் 5* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பாரா ..? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களை ஏமாற்றாமல் இரட்டை சதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். இதன்முலம் ஜெய்ஸ்வால் 277 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இதன் போது அவர் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார்.
அவர் 275 பந்துகளில் 191 ரன்கள் எடுத்து இருந்தபோது அடுத்தடுத்து சிக்ஸர் , பவுண்டரி விளாசி இரட்டை சதம் அடித்தார். இருப்பினும் அடுத்த சில நிமிடங்களில் 209 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய அனைத்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க இறுதியாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 396 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அகமது தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…