இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.. தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

INDvsENG

டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜன.22ம் தேதி) முதல் தொடங்குகிறது. அதன்படி, முதல் போட்டி நாளை மாலை 7 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை இந்தியா தேர்வு செய்துள்ளது.

இரண்டாவது ஜனவரி 25ம் தேதி சென்னையிலும் மூன்றாவது போட்டி 28ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. மேலும், தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது. டி20 தொடரின் இறுதிப் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்திய அணிக்காக முகமது ஷமி மற்றும் அக்சர் படேல் ஆகியோரும், இங்கிலாந்துக்காக ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இரு அணிகளும் மோதும் இந்த டி20 தொடரில் தங்களது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் நாளை விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இதுவரை இரு அணிகளும் 24 முறை டி20யில் மோதியுள்ளனர். அதில் இந்தியா 13 முறையும், இங்கிலாந்து 11 முறையும் வென்றுள்ளது.

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட், சாகிப் மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்