நேற்று மொகாலியில் நடைபெற்ற, இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நேற்று மொகாலியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய இந்திய அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 2 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 55 ரன்களைச் சேர்த்தார். சூரியகுமார் யாதவ் நான்கு சிக்ஸர்களுடன் 46 ரன்களும், கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 71 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் நேதன் எல்லிஸ் 3 விக்கெட்களும், ஹேஸல்வுட் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
209 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 61 ரன்களும், கேப்டன் பின்ச் 22 ரன்களும் அடித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன்னில் அவுட் ஆனார். ஸ்மித் 35 ரன்களும், மேத்தியூ வேட் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 45 ரன்களும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…