இந்திய அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது …!சதத்தை தவறவிட்ட பண்ட் ,ரகானே …!

Published by
Venu

இந்திய அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் அடித்தது.இந்திய
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 95 ஒவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் அடித்தது.
அதேபோல் இந்திய பந்துவீச்சில் குல்தீப் ,உமேஷ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சேஸ் 98 *, ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.

இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 101.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் அடித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரஸ்டான் சேஸ் 106,ஹோல்டர் 52 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் 6,குல்தீப் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 81 ஒவர்களில் 4 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் அடித்தது.

இதன் பின்னர் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 106.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக பண்ட் 92,ரகானே 80 ,பிரிதிவி 70 ரன்களும் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Recent Posts

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

3 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

3 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

4 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

5 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

5 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

5 hours ago