இந்தியா , ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர், ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே இரண்டாவது பந்திலேயே பிருத்வி ஷா ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து புஜாரா களம் இறங்கினார். பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் புஜாரா இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த புஜாரா அரைசதம் அடிக்காமல் 43 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து 74 உடன் தனது விக்கெட்டை இழந்தார் இதையடுத்து இறங்கிய ரகானே 47 ரன்களுடனும்பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்து உள்ளன. தற்போது களத்தில் விருத்திமான் சஹா 9 அஸ்வின் 15 ரன்களுடனும் உள்ளனர்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…