அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி .! ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்
- ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.ஆனால் ரோகித் 10 ரன்களில் வெளியேறினார்.இதன் பின்பு தவானுடன் ராகுல் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது.இந்த சமயத்தில் ராகுல் 47 ரன்களில் வெளியேறினார்.மறுபுறம் தவான் தனது அரை சதத்தை ஷிகர் நிறைவு செய்தார்.ஆனால் தவானும் 74 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதனைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் கோலி 16 ரன்கள்,ஸ்ரேயாஸ் 4 ரன்களிலும் வெளியேறினார்கள். சற்று தாக்குப்பிடித்த பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடியும் விக்கெட்டை பறிகொடுத்தது ஜடேஜா 25 ரன்கள்,பண்ட் , 28 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த ஷர்தால் தாகூர்,சமி ,குல்தீப் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
இறுதியாக இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனால் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் வார்னர் 44* ,பின்ச் 43 * ரன்களுடன் உள்ளனர்.