தடுமாறிய இந்திய அணி!! 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இன்று முதலாவது டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் செரிபெர்ட் மற்றும் கெலின் முன்ரோ களமிறங்கி இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். கெலின் முன்ரோ 34 ரன்கயிலும் , டிம் செரிபெர்ட் 84 ரன்களிலும் , கேன் வில்லியம்சன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது இந்திய அணி சார்பில் ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 15 ஓவர் முடிவில் 118 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.இந்திய அணியில் தோனி 23, க்ருனால் 19 ரன்களுடன் உள்ளனர்.