நேற்று ஆஸ்திரேலியா, இந்தியா இடையில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டை பறித்தனர்.
இதைத்த்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் ஆட்டம் தொடக்கத்திலேயே ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து புஜாரா களம் இறங்கினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 11 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்தனர். களத்தில் சுப்மான் கில் 28 ரன்னும், புஜாரா 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா விக்கெட்டை இழக்க பின்னர் அணியின் கேப்டன் ரகானே களம் இறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் அரை சதம் அடிக்காமல் 45 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையெடுத்து இறங்கிய ஹனுமா விஹாரி 21 ரிஷாப் பந்த் 29 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். தற்போது இந்திய அணி 60 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளனர்.
களத்தில் ரகானே 49 மற்றும் ஜடேஜா 3 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…