முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி படுதோல்வி..!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர். கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமியின் வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4 , ஹேசில்வுட் 5 விக்கெட்டை வீழ்த்தினர். இந்நிலையில், இந்திய அணி 36 ரன்கள் எடுத்த நிலையில் 90 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இன்று தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடினர்.
நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க, இதைதொடர்ந்து, இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே வந்த வேகத்தில் 6 ரன் எடுத்து நடையை கட்ட அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து 51 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 93 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.