இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. பேட்டிங் தரவரிசையில் கில் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறியுள்ளார்.

Indian cricket team

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் சமயத்தில், அவர்கள் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி சேர்க்கும் விதத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டியுள்ளது.

அணிகள் டாப் லிஸ்ட் :

ஒருநாள் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. இந்திய அணி 53 போட்டிகள் விளையாடி 6,486 புள்ளிகள் பெற்றுள்ளன. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி 5,039 புள்ளிகளுடன் உள்ளது.  3வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி 4,246 புள்ளிகளை பெற்றுள்ளது. 4வது இடத்தில் நியூசிலாந்து அணி 4,839 புள்ளிகளை பெற்றுள்ளது. 5வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா 4,421 புள்ளிகள் பெற்றுள்ளன.

பேட்டிங் டாப் லிஸ்ட் :

ஒருநாள் கிரிக்கெட் வீரர்களில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 770 புள்ளிகளுடன் உள்ளார். 3வது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி யுள்ளார். இவர் 756 புள்ளிகள் பெற்றுள்ளார். 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசன் 754 புள்ளிகளுடன் உள்ளார்.  5வது இடத்தில் விராட் கோலி 736 புள்ளிகளுடன் உள்ளார். 8வது இடத்தில் ஷ்ரேயஸ் 704 புள்ளிகளுடன் உள்ளார். 16வது இடத்தில் கே.எல்.ராகுல் 638 புள்ளிகளுடன் உள்ளார்.

பவுலிங் டாப் லிஸ்ட் :

பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷன 680 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2ஆம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் 657 புள்ளிகளுடன் உள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6 இடங்கள் முன்னேற்றம் கண்டு 650 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகராஜ் 648 புள்ளிகளுடன் உள்ளார். 5வது இடத்தில் நமீபியா வீரர் பெர்னாட் ஸ்காட்ஸ் 646 புள்ளிகளுடன் உள்ளார்

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 616 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் 13, 14வது இடத்தில் உள்ளனர்.

ஆல் ரவுண்டர் தரவரிசையில் 10 வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா 220 புள்ளிகளுடன் உள்ளார். அக்சர் படேல் 200 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்