INDvsENG : போதும் எப்படியாச்சும் அவுட் ஆயிருங்க ..! வலுவான நிலையில் இந்திய அணி ..!
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணியின் பேட்டிங்கானது மிகவும் வலுவாக இருந்தது. இந்திய அணியின் ரோஹித்தும், கில்லும் எதற்கும் அசராமல் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளராகளை அலற வைத்தனர். இங்கிலாந்து அணியில் களத்தில் நிற்கும் பீல்டர்களை அங்கும் இங்குமாக இருவரும் அலைய வைத்தனர். இருவரின் பேட்டிங்கானது அந்த அளவிற்கு இந்திய அணிக்கு மிகவும் பக்க பலமாக அமைந்தது.
Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?
ரோஹித்தும், கில்லும் அபாரமாக விளையாடி இருவரும் சதம் விளாசி அசத்தினர். இங்கிலாந்து அணியின் பந்து பந்து வீச்சாளர்களால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போது இங்கிலாந்து அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு பந்து வீச முடிவு செய்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரோஹித் ஷர்மாவை போல்ட் எடுத்து பெவிலியன் அனுப்பினார்.
Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!
ரோஹித் சர்மா 162 பந்துக்கு 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த கூட்டணியை உடைத்த பிறகு அடுத்து ஒரு சில பந்துகளுக்கு பிறகு கில்லும் அவுட் ஆனார். கில் 150 பந்துகளுக்கு 110 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய தேவ்தட் படிக்கல்லும், சர்பராஸ் கானும் மிக சிறப்பாக கூட்டணி அமைத்து விளையாடினார்கள். இருவரும் அரை சதம் விளாசினார். சர்பராஸ் கான் 60 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தட் படிக்கல் 103 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த கூட்டணியை இங்கிலாந்து அணி உடைத்தவுடன் சடசடவென அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது, ஆனாலும் ரன்கள் முன்னிலையில் இந்திய அணி நல்ல ஒரு நிலையில் இருந்தது. இன்றைய நாள் முழுவதும் இங்கிலாந்து அணியை பந்து வீச வைத்து இந்திய அணி களத்தில் களைப்படைய வைத்தனர்.
Read More :- ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!
இதனால், இந்த போட்டியின் 2-வது நாளான இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 120 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 473 ரன்களுக்கு எடுத்ததுடன் 255 ரன்கள் முன்னிலையிலும் உள்ளது. குலதீப் யாதவ் 55 பந்துக்கு 27* ரன்களும், பும்ரா 55 பந்துகளுக்கு 19* ரன்களும் எடுத்து காலத்தில் உள்ளனர்.