உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரெடி!!! சவுரவ் கங்குலி உறுதி
உலகக்கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணியின் வீரர் அம்பதி ராயுடு இந்த ஒரு நாள் தொடரில் மொத்தம் 190 ரன்கள் அடித்துள்ளார்.இந்நிலையில் ராயுடு குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நியூசிலாந்து அணியுடனான தொடரில் ராயுடு மிகவும் சிறப்பாக விளையாடினார்.நிச்சயமாக ராயுடு உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்.எனக்கு நம்பிக்கை உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்று நாள் நினைக்கிறேன்.இவ்வாறு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.