இந்திய அணி வேண்டுமென்றே செய்யவில்லை -சர்பராஸ் அகமது!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலகக்கோப்பை தொடர் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் முடித்த நிலையில் புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
லீக் போட்டியில் குறைவான புள்ளிகளை பெற்று பாகிஸ்தான் அணி வெளியேறியது.கடந்த 30-ம் தேதி இங்கிலாந்து ,இந்திய அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்று இருக்கும் ஆனால் அன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்தது என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.நேற்று பாகிஸ்தான் அணி சொந்த நாட்டுக்கு திரும்பியது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது , இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைய வில்லை இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது என கூறினார்.
“பெங்காலி” எதிரான போட்டியில் என் ? சோயிப் மாலிக் களமிறங்க வில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்க “பெங்காலி” என கூறாதீர்கள் பங்களாதேஷ் என கூறுங்கள் என சர்பராஸ் அகமது கூறினார்.
சோயிப் மாலிக் எங்கள் நாட்டு அணிக்காக சிறப்Sarfaraz Ahmedபான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் எங்கள் அணியில் இருந்தே பெருமை என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)