தென்னாபிரிக்காவை த்ரில்லாக வீழ்த்தி ..17 வருடங்களுக்கு மீண்டும் சாம்பியனான இந்திய அணி..!
டி20 உலகக்கோப்பை : 1 மாதங்களாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான போட்டியான இந்த போட்டியானது இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
அதன்பிறகு அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் சூர்யா குமார் யாதவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிரிச்சியளித்தார். இதனால் 34-3 என இந்திய அணி தடுமாறியது.
பின் களமிறங்கிய அக்சர் பட்டேல், விராட் கோலியுடன் இணைந்து அருமையாக ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரின் அதிரடி கூட்டணியில் இந்தியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதுவரை பல விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தனர்.
அதன் பிறகு 177 என்ற இலக்கை அடிப்பதற்கு பேட்டிங் களம் இறங்கியது தென்னாப்பிரிக்கா அணி முதலில் 2 விக்கெட் தொடர்ச்சியாக இழந்தாலும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த டி காக்கும் ஸ்டப்ஸும் இணைந்து அதிரடியான ரண்களை குவித்தனர்.
பின் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 31 ரன்களுக்கும், ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டி காக் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கிளாசன் அதிரடியாக விளையாடி ரன்களை விரைவாக சேர்த்தார். அவர் 27 பந்துக்கு 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் பும்ராவின் பந்து வீச்சில் யான்சன் விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டி இந்திய அணியின் பக்கம் சரிய தொடங்கியது. ஆனால் ஒரு பக்கம் மில்லர் களத்தில் இருந்து விளையாடி கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடைசி 6 பந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீச பாண்டியா வந்தார், மேலும் ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார். அதன்படி முதல் பந்தை வீசிய பாண்டியாவின் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்ற மில்லர், சூரியகுமார் யாதவின் பிரமாதமான கேட்சில் அவுட் ஆனார்.
அடுத்த பந்தை ரபாடா பவுண்டரி அடித்தவுடன் மேலும் விறுவிறுப்பாக போட்டி சென்றது, கடைசி 2 பந்துக்கு 9 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் அந்த பந்தில் ரபாடா விக்கெட்டை பாண்டியா எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது, இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். 17 வருடங்களுக்கு பிறகு 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
இதனால் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து வெற்றியை கொண்டாடி வந்தனர்.