#AUSvIND: இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு..! தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு..!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், நடராஜன், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் , ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மொய்சஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், சீன் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் , ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், தமிழக வீரர் நடராஜனுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025