நாளை ஆஸ்திரேலிய வாரியத்தலைவர் அணியுடன் மோதும் இந்திய அணி…!

Default Image

நாளை இந்திய அணி  ஆஸ்திரேலிய வாரியத்தலைவர் அணியுடன் 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் மோதவுள்ளது.

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நேற்று முன்தினம்  நடைபெற்றது .

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை அடைந்தது .இதனால் இந்திய அணி 3 வது போட்டி மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் கோலி 61 ,கார்த்திக் 22 ரன்களுடன் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளது.இதற்கு முன்னால் ஆஸ்திரேலிய வாரியத்தலைவர் அணியுடன் 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் மோதவுள்ளது.இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்