தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டி கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால் தென் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடர் ஒத்திவைப்பதாகவும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பங்கேற்கும் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.
டெஸ்ட் போட்டிகள் :
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும்,
இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும்,
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.
ஒருநாள் போட்டிகள்:
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
#BREAKING : ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கம்..!
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி தலைமையில் விளையாடயுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா , முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்கூர், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Squad: Virat Kohli (Capt),Rohit Sharma(vc), KL Rahul, Mayank Agarwal, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Shreyas Iyer, Hanuma Vihari, Rishabh Pant(wk), Wriddhiman Saha(wk), R Ashwin, Jayant Yadav, Ishant Sharma, Mohd. Shami, Umesh Yadav, Jasprit Bumrah, Shardul Thakur, Md. Siraj. pic.twitter.com/6xSEwn9Rxb
— BCCI (@BCCI) December 8, 2021