இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் தற்போது அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வவருகிறது.
இதுவரை நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சமமாக உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், தற்போது நடைபெற்று வரும் டி-20 தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…