வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

Default Image

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை ஒயிட் வாஸ் செய்தும் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இந்நிலையில்,

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது. பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பிசிசிஐ இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணி அறிவித்துள்ளது.

டி20 போட்டி வீரர்கள்: 

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டி வீரர்கள்: 

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பும்ரா, முகமது ஷமிக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2-வது ஒருநாள் போட்டியில் இருந்து கே.எல் ராகுல் களமிறங்குவார் எனவும் ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குணமடைந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்