கடைசி 2 டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமனில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3, 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர் அஸ்வின் , குல்தீப் யாதவ், ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.