இந்திய அணி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியுடனான போட்டி …!பயிற்சி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது…!

Default Image

இந்திய அணி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியுடனான  4 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது .
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை அடைந்தது .இதனால் இந்திய அணி 3 வது போட்டி மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் கோலி 61 ,கார்த்திக் 22 ரன்களுடன் இருந்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளது.இதற்கு முன்னால் நவம்பர் 28 ஆம் தேதி  கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் மோதியது. மழை பெய்து வரும் நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.2-வது நாளில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா 358 ரன் குவித்து ‘ஆல் அவுட்’ ஆனது.பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய லெவன் 544 ரன் குவித்து ‘ஆல்ஆவுட்’ ஆனது.186 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது பிரித்விஷா பீல்டிங்கின் போது காயம் அடைந்ததால் ராகுலுடன் முரளிவிஜய் தொடக்க வீரராக ஆடினார். இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்