இன்றைய போட்டியில் 2 சாதனைகளை செய்த இந்திய அணி..!
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் போட்டியானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று முதலாவது அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி மோதி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும், ரோஹித் ஷர்மா 47 ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 398 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டி மூலம் இந்திய அணி 2 சாதனைகளை செய்துள்ளது.
உலகக்கோப்பையில் நாக் அவுட் போட்டியின் போது அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்:
19 சிக்ஸர்கள் – இந்தியா vs நியூசிலாந்து, 2023 (அரையிறுதி)
16 சிக்ஸர்கள் – வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, 2015 (அரையிறுதி)
15 சிக்ஸர்கள் – நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 2015 (அரையிறுதி)
உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்த அணிகள்:
397/4 – இந்தியா vs நியூசிலாந்து, 2023 (அரையிறுதி)
393/6 – நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 2015 (அரையிறுதி)
359/2 – ஆஸ்திரேலியா vs இந்தியா, 2003 (இறுதிப்போட்டி)
328/7 – ஆஸ்திரேலியா vs இந்தியா, 2015 (அரையிறுதி)